சொல் பொருள்
(வி) பரவு,
சொல் பொருள் விளக்கம்
பரவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
spread
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அத்த இருப்பை ஆர் கழல் புது பூ துய்த்த வாய துகள் நிலம் பரக்க கொன்றை அம் சினை குழல் பழம் கொழுதி வன் கை எண்கின் வய நிரை பரக்கும் – அகம் 15/15-18 அரிய சுரத்தில் உள்ள இலுப்பை மரத்தின் ஆர்க்கு கழன்ற புதிய பூக்களைத் தின்ற வாயையுடைய, தூசி நிலத்தின்மேல் பரவும்படியாகக் கொன்றை மரத்தின் கிளைகளில் உள்ள குழல் போன்ற பழத்தைத் தடவிக்கொடுத்து- வலிய கையை உடைய கரடியின் வலிமை உள்ள கூட்டம் பரவலாகச் செல்லும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்