சொல் பொருள்
(பெ) பரணர், ஒரு சங்க காலப் பெரும்புலவர்,
சொல் பொருள் விளக்கம்
பரணர், ஒரு சங்க காலப் பெரும்புலவர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a great poet of the sangam period
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும் பரணன் பாடினன்-மன்-கொல் – புறம் 99/10-12 மேற்சென்று போரின்கண் வென்று நின் வலியைத் தோற்றுவித்த அற்றை நாளும் பாடுவர்க்குப் பாட அரியை, இன்றும் பரணன் பாடினன். பரணர் பாடிய 85 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவர் தாம் பாடிய அகப்பொருள் பாடல்களிலும் அவர் காலத்தனவும், அவரது காலத்துக்கு முன்னர் நிகழ்ந்து தாம் அறிந்தனவுமாகிய பல வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். எனவே இவர் வரலாற்றுப் புலவர் எனப் போற்றப்படுகிறார்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்