Skip to content

பருகல்

பொருள்

  • பருகுதல், பருகல் என்பவை பெருவேட்கையால் நீர்குடித்தல்


விளக்கம்

பருகுதல், பருகல் என்பவை பெருவேட்கையால் நீர்குடித்தல்; “பருகுவன் அன்ன ஆர்வம்” என்னும் உவமையே பருகுதல் என்பதன் வேட்டைப் பெருக்கத்தை உரைக்கும். “பருகுவான் போல் நோக்குதல்” எவ்வளவு பருத்த நோக்கு! பருகுவன்ன வேட்கையைப் பகர்கின்றது புறநானூறு (207).

“பருகுதல் வேட்கையர்க்கு நீர் தருதல் ஓரறம்; பேரறம். அதனால், “நீர்தான் கொணர்ந்து பருக்கி இளைப்பை நீக்கீரே” என ஆண்டாளார் ஏவுகின்றார் (நாச்சியார் திருமொழி 13:4).

– இரா. இளங்குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *