Skip to content

பருசம்

பொருள்

  • உயரம்


விளக்கம்

பரிசம் என்பது பொதுமக்களால் பருசம் எனப்படுவதும் உண்டு. விரிசம் பழம்’ என்பது விருசம் பழம்’ என்பது போன்றது அது. ஆனால், இப்பருசம் அப்பொருட்டதன்று. கிணற்றின் நீராழத்தைக் காண்பார் ஓராள் பருசம் ஈராள் பருசம் என்பது நாட்டுப்புற வழக்கம்.

ஆள் பருசம், ஆள் உயரம்; நீரின் நீளத்தை விடுத்து அகலத்தை அல்லது நிலை உயரத்தைக் குறித்தலால் ஒருவகையால் பருமையாம். ஓராள் மட்டம், ஈராள் மட்டம் என்பவற்றில் வரும் மட்டம் திரளல் பொருளதே. மட்டம், மத்தம்; மத்திப்பு, மட்டிப்பு; மத்து, மட்டு என்பவற்றை அறிக.

– இரா. இளங்குமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *