சொல் பொருள்
(பெ) பரு + ஏர், மிக்க அழகு
சொல் பொருள் விளக்கம்
பரு + ஏர், மிக்க அழகு
பருத்ததும் அழகியதுமாம் தன்மை பரேர் எனப்பட்டது
பருமை அழகு இவற்றொடும் வலிமையும் அமைந்தது பரேர் எறுழ் எனப்பட்டது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
much beauty
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பசு மணி பொருத பரேர் எறுழ் கழல் கால் பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும் பட்டினப்பாலை:294 பனை திரள் அன்ன பரேர் எறுழ் தட கை கொலை சினம் தவிரா மதன் உடை முன்பின் அகநானூறு:148 படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் முடலை யாக்கை முழு வலி மாக்கள் பெரும்பாணாற்றுப் படை:60 நெடுநல்வாடை:31 எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவு தோள் வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து பதிற்றுப்பத்து:31 படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – பெரும் 60, நெடு 31 தழை விரவின மாலையையும், மிக்க அழகினையும், வலிமையினையும் உடைய இறுகின தோளினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்