சொல் பொருள்
(பெ) சில விலங்குகளின் இளமைப் பெயர்,
சொல் பொருள் விளக்கம்
சில விலங்குகளின் இளமைப் பெயர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
the young ones of certain animals
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பறழ் பன்றி பல் கோழி – பட் 75 குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும், துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4 பஞ்சுத்தலையைக் கொண்ட குரங்கின் வலிய குட்டி தொங்க, ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே – கலி 94/6 ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் – அகம் 384/5 முயல்குட்டிகள் குதிக்கும் முல்லைய்யாய அழகிய காட்டில் பாசி பரப்பில் பறழொடு வதிந்த ————————- ————————- நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/2-4 பாசியினையுடைய நீர்ப்பரப்பில் குட்டியுடன் கூடியிருக்கும் ——————– —————————– காலைப்பொழுதில் இரையினைக் கொணர்தற்கு எழுந்த நீர்நாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்