Skip to content

சொல் பொருள்

(பெ) சில விலங்குகளின் இளமைப் பெயர்,

சொல் பொருள் விளக்கம்

சில விலங்குகளின் இளமைப் பெயர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the young ones of certain animals

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பறழ் பன்றி பல் கோழி – பட் 75

குட்டிகளையுடைய பன்றிகளையும், பலவிதமான கோழிகளையும்,

துய் தலை மந்தி வன் பறழ் தூங்க – நற் 95/4

பஞ்சுத்தலையைக் கொண்ட குரங்கின் வலிய குட்டி தொங்க,

ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே – கலி 94/6

ஆந்தைக்குப் பிறந்த நாய்க்குட்டியே

முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் – அகம் 384/5

முயல்குட்டிகள் குதிக்கும் முல்லைய்யாய அழகிய காட்டில்

பாசி பரப்பில் பறழொடு வதிந்த
————————- ————————-
நாளிரை தரீஇய எழுந்த நீர்நாய் – அகம் 336/2-4

பாசியினையுடைய நீர்ப்பரப்பில் குட்டியுடன் கூடியிருக்கும்
——————– —————————–
காலைப்பொழுதில் இரையினைக் கொணர்தற்கு எழுந்த நீர்நாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *