சொல் பொருள்
(வி) 1. அதிகமாகு, பெருகு, 2. பலவாகு
சொல் பொருள் விளக்கம்
1. அதிகமாகு, பெருகு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
increase, expand, multiply
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கை கவர் நரம்பின் பனுவல் பாணன் செய்த அல்லல் பல்குவ – நற் 200/8,9 கையினால் தடவுதற்குரிய நரம்பினால் இசைக்கும் பாட்டுக்களைக் கொண்ட பாணன் செய்த துன்பங்கள் நாளுக்குநாள் பெரிதாகின்றன பசும் பிசிர் ஒள் அழல் ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/5,6 கைப்புலத்தைச் சுட்டெரித்த பசிய பிசிர்களுடன் ஒளிவிடும் நெருப்பானது ஞாயிறு பலவாகியதைப் போன்ற மாயத்தோற்றத்துடன் சுடர்விட்டுத் திகழ,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்