Skip to content

சொல் பொருள்

(வி) 1. அதிகமாகு, பெருகு, 2. பலவாகு

சொல் பொருள் விளக்கம்

1. அதிகமாகு, பெருகு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

increase, expand, multiply

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கை கவர் நரம்பின் பனுவல் பாணன்
செய்த அல்லல் பல்குவ – நற் 200/8,9

கையினால் தடவுதற்குரிய நரம்பினால் இசைக்கும் பாட்டுக்களைக் கொண்ட பாணன்
செய்த துன்பங்கள் நாளுக்குநாள் பெரிதாகின்றன

பசும் பிசிர் ஒள் அழல்
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு – பதி 62/5,6

கைப்புலத்தைச் சுட்டெரித்த பசிய பிசிர்களுடன் ஒளிவிடும் நெருப்பானது
ஞாயிறு பலவாகியதைப் போன்ற மாயத்தோற்றத்துடன் சுடர்விட்டுத் திகழ,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *