சொல் பொருள்
(பெ) பாண்டிய மன்னன்,
சொல் பொருள் விளக்கம்
பாண்டிய மன்னன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a Pandiya king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நெடும் தேர் இழை அணி யானை பழையன்மாறன் மாட மலி மறுகின் கூடல் ஆங்கண் வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த கிள்ளிவளவன் நல் அமர் சாஅய் – அகம் 346/18-22 நீண்ட தேரினையும் இழையை அணிந்த யானையினையுமுடைய பழையன் மாறன் என்பானை மாடங்கள் மிக்க தெருக்கலையுடைய கூடலாகிய ஆங்கே மிக்க சேனையுடன் வேற்றுப்புலத்தே போர் செய வந்து தங்கியிருந்த கிள்ளிவளவன் நல்ல போரின்கண் சாய்த்து கூடல் என்பது மதுரைக்கு இன்னொரு பெயர். மாறன் என்பது பாண்டியர்களின் பெயர். கிள்ளிவளவன் பெரும் படையுடன் மதுரைக்குப் படையெடுத்து வந்து மதுரைக்கு வெளியில் தங்கி, போரிட்டு, பழையன் மாறனை வென்றான். இதுகேட்டு அப்போதிருந்த சேர மன்னன் கோதை மார்பன் மகிழ்ந்தான் என்று இதே பாடல் குறிப்பிடுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்