சொல் பொருள்
வெள்ளென வீழும் அருவி நீரைப் ‘பாடிப்பால்’ என்பது குற்றால வட்டார வழக்கு
சொல் பொருள் விளக்கம்
“கல் எனக் கரைந்து வீழும் கடும்புனல் குழவி” என்பது திருவிளையாடற் புராணத்தில் இடம் பெறும் தொடர். ‘அருவி முழக்கம்’ என்பது மக்கள் வழக்கு. ஒலியெழுப்பி வெள்ளென வீழும் அருவி நீரைப் ‘பாடிப்பால்’ என்பது குற்றால வட்டார வழக்கு. அருவி தந்த அறிவுக் கொடை இவ் வாட்சி பொது மக்கள் புலமை வளம் அல்லவோ இத்தகைய சொற்படைப்பு!
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்