Skip to content

சொல் பொருள்

(பெ) யாழ் முதலியவற்றை இசைத்துப்பாடும் குலத்தவர்,

சொல் பொருள் விளக்கம்

யாழ் முதலியவற்றை இசைத்துப்பாடும் குலத்தவர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

An ancient class of Tamil bards and minstrels;

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப
வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர் – நற் 172/7,8

புதியதாய் வந்த பாணரின் மெல்லிய இசைப்பாட்டுப் போல
வலம்புரியாக வெண்சங்கு ஒலிக்கும் ஒளிர்கின்ற நீரையுடைய

பாணர் நரம்பினும் இன் கிளவியளே – ஐங் 100/4

பாணரின் யாழ்நரம்பு எழுப்பும் இசையிலும் இனிய சொற்களையுடையவள்.

பாணர் முல்லை பாட சுடர் இழை
வாள் நுதல் அரிவை முல்லை மலைய
இனிது இருந்தனனே நெடுந்தகை – ஐங் 408/1-3

பாணர்கள் முல்லைப் பண்ணை யாழில் வாசிக்க, ஒளிரும் அணிகலன்களைக் கொண்ட
ஒளிபொருந்திய நெற்றியையுடைய மனைவி முல்லை மலரைச் சூடியிருக்க,
இனிமையாக இருந்தான் நெடுந்தகையாளன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *