சொல் பொருள்
(வி) 1. தாமதி, நிறுத்திவை, 2. தாமதப்படு
(பெ) 1. சமயம், காலம், 2. தாளம், 3. இசைப்பாட்டு, 4. கை, 5. தாமதம், 6. செயற்பாங்கு,
சொல் பொருள் விளக்கம்
1. தாமதி, நிறுத்திவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
delay, stop for a while, wait, occasion, time, measure of time in music, song, melody, hand, arm, delay, style, manner
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56 இது என்னுடைய சமயம்! கொஞ்சம் பொறு! ஏடா! நிறுத்திவை, நீ உன்னுடைய சூளுரைகளை! சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் – கலி 102/13 “அந்த ஏறுதழுவலை நடத்தச் சொல்லுங்கள்”; “இனி காலம் தாழ்த்தமாட்டோம்” என்றனர்; “பறையை முழக்குங்கள்” என்றனர்; பரப்பினர் என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் – பரி 8/56 இது என்னுடைய சமயம்! கொஞ்சம் பொறு! ஏடா! நிறுத்திவை, நீ உன்னுடைய சூளுரைகளை! ஒண் நுதல் விறலியர் பாணி தூங்க – பொரு 110 ஒளிவிடும் நெற்றியையுடைய விறலியர் தாளத்திற்கேற்ப ஆட அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை விருந்தின் பாணி கழிப்பி – மலை 538,539 அளவற்ற வலிமைகொண்ட கடவுளை வாழ்த்திய பின்னர், (உமக்கே உரித்தான)புதிய பாடல்களைப் பாடி பாணி கொண்ட பல் கால் மெல் உறி ஞெலி_கோல் கல பை அதளொடு சுருக்கி பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் – நற் 142/2-4 கையில் கொண்ட பல கால்களைக் கொண்ட மென்மையான உறியுடன், தீக்கடைகோல் வைக்கும் பையினைத் தோலுடன் சுருட்டி, பனையோலைப் பாயை முதுகுப்பக்கம் போட்டிருக்கும் பால் விற்கும் இடையனை மாண் இழை நெடும் தேர் பாணி நிற்ப – அகம் 50/4 நன்கு அலங்கரிக்கப்பட்ட நீண்ட தேர் காத்துநிற்க நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர் சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள் கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 190-194 (நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை நீரென்று கருதிப் பருகிய மயில் — அகன்ற ஊர்களில் விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண் கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் — தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்