சொல் பொருள்
(பெ) 1.கண்காணிப்பு, காவல், 2. பார்த்தல், பார்வை
சொல் பொருள் விளக்கம்
1.கண்காணிப்பு, காவல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
watch, looking, look
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை பார்வல் பாசறை தரூஉம் பல் வேல் பூழியர் கோவே – பதி 84/4-6 நெற்றியை மேலே தூக்கி அண்ணாந்து பார்த்து நடக்கத்தொடங்கும் போர்த்தொழிலில் நல்ல பயிற்சியையுடைய யானைப்படை கண்காணிப்புக் கூடாரத்துக்கு வந்து சேருகின்ற, பல வேற்படையினைக் கொண்ட பூழிநாட்டவர்க்கு வேந்தனே மாரி ஆம்பல் அன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு – குறு 117/1-2 மழைக்காலத்து ஆம்பல் பூவைப்போன்ற கொக்கின் பார்வைக்கு அஞ்சிய துன்பத்தையுடைய ஈரமான நண்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்