Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மலர்மாலை, பின்னிய மாலை 2. பின்னிப் பிணைக்கப்பட்டது

சொல் பொருள் விளக்கம்

1. மலர்மாலை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

garland of flowers

that which is interwined and joined together

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குரூஉ கண் பிணையல் கோதை மகளிர் – மலை 349

(பல)நிறங்கொண்ட காம்புகளையுடைய மலர்களைப் பிணைத்த மாலை (அணிந்த)பெண்கள்

பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல்
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் – நற் 90/6,7

பெரிய கயிறாகத் தொங்கும் கனத்த பனைநாரால் பின்னிப்பிணைக்கப்பட்ட ஊஞ்சலில்
பூப்போன்ற கண்களையுடைய தோழியர் ஆட்டிவிட ஆடாள்,

பிணையல் அம் தழை தைஇ துணையிலள் – நற் 170/3

பிணைத்த அழகிய தழைகளால் தைக்கப்பட்ட உடையை அணிந்து, தனியாக வந்திருக்கும் இவள்

வயலை செம் கொடி பிணையல் தைஇ
செ விரல் சிவந்த சே அரி மழை கண்
செ வாய் குறு_மகள் – ஐங் 52/1-3

வயலையின் சிவந்த கொடியைப் பிணைத்து மாலையாகக் கட்டியதால்
சிவந்த இவளின் விரல்கள் மேலும் சிவந்துபோனவளும், சிவந்த வரிகளைக் கொண்ட குளிர்ந்த கண்களையும்,
சிவந்த வாயையும் உடையவளுமான இந்த இளைய மகள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *