சொல் பொருள்
1. (வி) குவி, அடுக்கு, 2. (பெ) 1. பின்பக்கம், 2. பின் நாள், இனிமேல்
சொல் பொருள் விளக்கம்
குவி, அடுக்கு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
heap, pile up, back, rear, hereafter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து சூடு கோடு ஆக பிறக்கி நாள்தொறும் குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 242-244 குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச், சூட்டை மலையாக அடுக்கி, நாள்தோறும் மலை என்னும்படி குவித்த குறையாத நெற்பொலி முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய துனை பரி துரக்கும் செலவினர் – முல் 101,102 முதிர்ந்த காயையுடைய வள்ளியங்காடு பின்னாக மறைய, விரைந்து செல்லும் பரியைக் கடிதாகச் செலுத்தும் செலவினையுடையவரின் தந்தை வித்திய மென் தினை பைபய சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ – நற் 306/1,2 தந்தை விதைத்த மென்மையான தினைப்பயிரைக் காக்க, மெல்லமெல்ல வரும் சிறிய கிளைகளை ஓட்டுதல் இனிமேல் என்ன ஆகுமோ?
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்