Skip to content
பிளவை

பிளவை என்பது பிளக்கப்பட இறைச்சித் துண்டு

1. சொல் பொருள்

(பெ) பிளக்கப்பட்ட துண்டு,

2. சொல் பொருள் விளக்கம்

பிளக்கப்பட இறைச்சித் துண்டு பிளவை எனப்படுகிறது. இதைத்தவிர இச் சொல் வேறு சங்க இலக்கியங்களில் காணப்படவில்லை. யானைப் பாகன் அங்குசத்தால் யானையின் நெற்றியைக் குத்திப் பிளந்த புண் பிளவை என்று மணிமேகலையில் கூறப்பட்டுள்ளது.

பிளவை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

slice, piece

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை
பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ – மலை 176,177

முள்ளம்பன்றியைக் கொன்ற மின்னுகின்ற கொழுப்பையுடைய பிளக்கப்பட்ட தசைத்துண்டுகளையும்,
பெண் நாயை விரட்டிக் கடிக்கவிட்டுக்கிடைத்த (உடும்பின்)பருமனான தசைத்துண்டோடு கலந்து,

பிளவை
பிளவை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

https://timesofindia.indiatimes.com/videos/city/bengaluru/karnataka-man-kills-porcupine-and-eats-meat-arrested-after-sharing-video-on-social-media/videoshow/74434038.cms

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *