Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பொய்த்துப்போதல், 2. (இகழ்ச்சி அல்லது வருத்தக்குறிப்பு) வாழ்க்கை, உயிர்வாழ்தல், 3. இழத்தல்

சொல் பொருள் விளக்கம்

1. பொய்த்துப்போதல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

failure to happen, life, existence (with a slight or contempt), losing

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநி – மலை 578

வளம் பொய்த்துப்போதல் இல்லாது, வாய்த்த வளமும் செழித்துமிகுந்து(உள்ள

நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ – நற் 400/5,6

நீயின்றி வாழ்தல் எனக்குக் கூடுமாயின், இவ்விடத்திலிருந்து
இனிமையைத் தராத நோக்கத்துடன் எனக்கு என்ன பிழைப்புத்தான் உண்டு

செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு
ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும்
பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி
நிரையம் ஒரீஇய வேட்கை புரையோர் – பதி 15/28-31

சான்றோர் செய்த நல்லறங்களைத் தாமும் விரும்பிச் செய்து சூழ இருக்கும் சுற்றத்தாருடன்,
உண்மையே உரைத்துப் புலனடங்கிய ஒழுக்கத்தோடு, எப்பொழுதும்
வாழுமிடங்களை இழப்பதை அறியாது, இனியவற்றை நுகர்வதை அடைந்து,
நரகத்தை வெறுத்த அறவேட்கையுடைய சான்றோர்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *