சொல் பொருள்
(பெ) புதியன,
சொல் பொருள் விளக்கம்
புதியன,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
new (things)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் புலரா நெஞ்சமொடு புதுவ கூறி இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள் போலும் அன்னை – நற் 339/2-5 ஊராரின் பழிச்சொல்லை விளைவிக்கிறது இல்லையா இந்த உறவு என்று மிகவும் அன்பு புலராத நெஞ்சத்துடனே புதிய புதிய காரணங்களைக் கூறிக்கொண்டு இருவரும் வருந்தும் துன்பப் பெருக்கை அறிந்துகொண்டாள் போலும் நம் அன்னை! புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ – கலி 98/2 புதிய மலரைத் தேடியலையும் வண்டினைப் போல, புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் அரும் பொருள்வேட்டம் எண்ணி – அகம் 389/12,13 வருத்தம் இல்லாத உள்ளத்துடன் புதிய பொருள்களைத் தந்து மகிழுவதற்குரிய அரிய பொருளை ஈட்டிவரலை விரும்பி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்