Skip to content

சொல் பொருள்

(பெ) புதியன,

சொல் பொருள் விளக்கம்

புதியன,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

new (things)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும்
புலரா நெஞ்சமொடு புதுவ கூறி
இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம்
அறிந்தனள் போலும் அன்னை – நற் 339/2-5

ஊராரின் பழிச்சொல்லை விளைவிக்கிறது இல்லையா இந்த உறவு என்று மிகவும்
அன்பு புலராத நெஞ்சத்துடனே புதிய புதிய காரணங்களைக் கூறிக்கொண்டு
இருவரும் வருந்தும் துன்பப் பெருக்கை
அறிந்துகொண்டாள் போலும் நம் அன்னை!

புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ – கலி 98/2

புதிய மலரைத் தேடியலையும் வண்டினைப் போல,

புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும்
அரும் பொருள்வேட்டம் எண்ணி – அகம் 389/12,13

வருத்தம் இல்லாத உள்ளத்துடன் புதிய பொருள்களைத் தந்து மகிழுவதற்குரிய
அரிய பொருளை ஈட்டிவரலை விரும்பி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *