சொல் பொருள்
(பெ.அ) புல்லிய, புன்மையான, இழிவான, சிறுமையான, சிறிய, அசுத்தமான
சொல் பொருள் விளக்கம்
புல்லிய, புன்மையான, இழிவான, சிறுமையான, சிறிய, அசுத்தமான
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
mean, low, small, unclean
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 312,313 கரிய பனையின் – (உள்ளே)வெளிற்றினையுடைய – புல்லிய செறும்பை ஒத்த கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13 புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ புன் தலை இரும் பரதவர் – பட் 90 பரட்டைபாய்ந்த தலையினையுடைய கரிய பரதவர் புன் கால் நாவல் பொதி புற இரும் கனி – நற் 35/2 புல்லிய அடிமரத்தையுடைய நாவல் மரத்தின் பொதியைப் போன்ற வெளிப்பகுதியையுடைய பெரிய பழத்தை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
நன்று. நன்றி!