Skip to content

சொல் பொருள்

(பெ.அ) புல்லிய, புன்மையான, இழிவான, சிறுமையான, சிறிய, அசுத்தமான

சொல் பொருள் விளக்கம்

புல்லிய, புன்மையான, இழிவான, சிறுமையான, சிறிய, அசுத்தமான

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mean, low, small, unclean

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 312,313

கரிய பனையின் – (உள்ளே)வெளிற்றினையுடைய – புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி

புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ – நெடு 13

புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ

புன் தலை இரும் பரதவர் – பட் 90

பரட்டைபாய்ந்த தலையினையுடைய கரிய பரதவர்

புன் கால் நாவல் பொதி புற இரும் கனி – நற் 35/2

புல்லிய அடிமரத்தையுடைய நாவல் மரத்தின் பொதியைப் போன்ற வெளிப்பகுதியையுடைய பெரிய பழத்தை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “புன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *