சொல் பொருள்
(பெ) சேரன் படைத்தலைவர்களில் ஒருவன்
சொல் பொருள் விளக்கம்
சேரன் படைத்தலைவர்களில் ஒருவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
one of the army chiefs of King cEran
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/7-10 நன்னனும், ஏற்றை என்பவனும், நறிய பூண்களை அணிந்த அத்தியும், (பகைவர்) நெருங்குதற்கரிய மிக்க வலிமையுடைய கங்கனும், கட்டியும், பொன் அணிகலன்கள் அணிந்த வலிய வில்லையுடைய புன்றுறையும், என்பதாக முன்பு அவர்கள் ஒன்றுகூடியிருந்த அளத்தற்கரிய சிறப்பு வாய்ந்த பாசறையில், இந்தப் புன்றுறை என்பவன் நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன் கட்டி, ஆகிய மற்ற சேரன் படைத்தலைவர்களுடன் பாசறையில் இருந்தபோது, சோழன் பெரும்பூட் சென்னியின் படைத்தலைவனான பழையன் என்பான், அவருடன் போர்செய்து இறந்தான்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்