Skip to content
புன்னாகம்

புன்னாகம் என்பது நாகமரம், புன்னைமர இனத்தில் ஒன்று.

1. சொல் பொருள்

(பெ) ஒரு மரம்/ பூ

2. சொல் பொருள் விளக்கம்

நாகமரவினத் தாவரம். நாகமரம் புன்னைமர இனத்தில் ஒன்று. இது இலங்கையின் தேசிய மரம் ஆகும்.  புன்னாகம் மரத்தில் பூக்கும் மலர், ‘நறும்புன்னாகம்’ எனச் சங்கப்பாடல் குறித்திருப்பதால், புன்னாகம் என்பது இவற்றினும் வேறுபட்டது என அறியலாம்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a tree/flower, Mesua ferrea, Ceylon Ironwood

புன்னாகம்
புன்னாகம்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

நந்தி நறவம் நறும் புன்னாகம் – குறி 91

நந்தியாவட்டை, நறைக்கொடி, நறிய புன்னாகம்

குறிஞ்சிப் பாட்டில் கபிலர் குறிப்பிடும் 99 பூக்களில் இது 87-ஆவது பூ ஆகும்.

வரையன புன்னாகமும்
கரையன சுரபுன்னையும் – பரி 11/16,17

என்ற பரிபாடல் அடிகளால் இது குறிஞ்சி நிலப் பூ என்பது உறுதியாகின்றது.
சிலர் இதனை நாகம் என்றும், புன்னை என்றும் கூறுகின்றனர்.
ஆனால், அதே குறிஞ்சிப்பாட்டில், கபிலர்,

ஆரம் காழ்வை கடி இரும் புன்னை
நரந்தம் நாகம் நல்லிருள்நாறி – குறி. 93,94

என்று, புன்னை, நாகம் ஆகிய மலர்களைத் தனியே குறித்திருப்பதால், புன்னாகம் என்பது இவற்றினும்
வேறுபட்டது என அறியலாம்.

karkanirka.org என்ற இணையதளம் இதனை calophyllum elatum bedd என்கிறது.

நந்தி நறவம் நறும் புன்னாகம்/பாரம் பீரம் பைம் குருக்கத்தி - குறி 91,92

வரையன புன்னாகமும்/கரையன சுரபுன்னையும் - பரி  11/16,17
புன்னாகம்
புன்னாகம்
புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட தொழ பொருநர் - தேம்பா:36 100/2

செல் நாகம் நீர் பொழிய தேன் பொழியும் புன்னாகம் திருவின் பூப்ப - தேம்பா:32 22/1

புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை - முத்தொள்:6/1

புன்னாக மணம் கமழும் பூம் புகலூர் வந்து இறைஞ்சி பொருவு_இல் சீர்த்தி - 5.திருநின்ற:1 231/3

போது அவிழ் கைதை எங்கும் பூக புன்னாகம் எங்கும் - 1.திருமலை:2 29/4
புன்னாகம்
புன்னாகம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *