Skip to content

சொல் பொருள்

(வி) 1. செய், 2. விரும்பு, 3. மிகுந்திரு, 4. ஆக்கு, படை

2. (பெ) 1. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கயிறு, நூல் போன்றவற்றைத் திரித்து உருவாக்கியதில்
ஒரு பகுதி, 2. முறுக்கு

சொல் பொருள் விளக்கம்

1. செய்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

do, make, desire, abound, create, one part of a twisted twines or ropes, Strand, twist, as of straw

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு
நலம் புரி கொள்கை புலம் பிரிந்து உறையும்
செலவு நீ நயந்தனை ஆயின் – திரு 61-64

அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் –
திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு,
நன்மைகளையே செய்யும் மேற்கோளுடன், (இருக்கும்)இடத்தை விட்டு (வேறிடத்தில்) தங்கும்
பயணத்தை நீ விரும்பியவனாய் இருந்தால்

நால் பெரும் தெய்வத்து நல் நகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 160-162

நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய
பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி

நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை – நற் 148/4

நெடிய காய்ந்துபோன நீர்நிலைகள் மிகுந்த நீரற்ற நீண்ட பாலை வழியில்

அழல் புரிந்த அடர் தாமரை – புறம் 29/1

எரியால் ஆக்கப்பட்ட தகடாகச் செய்த தாமரைப்பூ

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 183

ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,

பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – சிறு 34

பொன்னை வார்த்த (கம்பியினை)ஒத்த முறுக்கு அடங்கின நரம்பின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *