புருவை என்பது ஆடு
1. சொல் பொருள்
(பெ) 1. ஒரு வகை ஆடு, 2. இளமை
பார்க்க மை துரு துருவை யாடு வெள்யாடு புருவை வெண்மறி
2. சொல் பொருள் விளக்கம்
1. ஒரு வகை ஆடு
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a kind of sheep, youthfulness
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
செம் நில புறவின் புன் மயிர் புருவை
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/1,2
செம்மண் நிலமான முல்லைக் காட்டில், புல்லிய மயிரைக்கொண்ட செம்மறியாடுகளின்
ஓசை இனிய தெளிந்த மணி கட்டப்பட்ட கூட்டம், மேயும் இடத்தைவிட்டு தொழுவத்துக்குத் திரும்ப,
புருவை பன்றி வருதிறம் நோக்கி
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய
நெடும் சுடர் விளக்கம் நோக்கி – அகம் 88/4-6
இளமை பொருந்திய பன்றியின் வரும்வகையினை நோக்கி
வலிய கையினையுடைய தினைப்புனங்காப்போன் பரண் மேல் கொளுத்திவைத்த
நீண்ட சுடரின் ஒளியினை நோக்கி
குரு மயிர் புருவை நசையின் அல்கும் – ஐங் 238/2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்