சொல் பொருள்
அஞ்சனம், பெண்கள் கண்களுக்குத் தீட்டிக்கொள்ளும் கருப்புநிற அலங்காரப் பொருள், எழுதுபொருளாகப்பயன்படும் திரவம், கருமை நிறம், குற்றம், களங்கம், ஆடு, எருமை, கருமேகம், இருள்,
சொல் பொருள் விளக்கம்
அஞ்சனம், பெண்கள் கண்களுக்குத் தீட்டிக்கொள்ளும் கருப்புநிற அலங்காரப் பொருள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a black pigment applied on the edges of eyelashes by women, ink, black colour, fault, defect, stain, blot, goat, sheep, buffalo, dark clouds, darkness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழை கண் – நற் 252/8,9 மென்மை பொருந்தி அகன்ற அல்குலையும், மையிட்டு மலர்களைக் கட்டிவைத்தது போன்ற கரிய இமைகளைக் கொண்ட குளிர்ச்சியான கண்களையும், மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் – மது 417 மை ஒழுகினாற் போன்ற செறிந்த கரிய கூந்தலினையுமுடைய மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி – பெரும் 271 கரிய பெரிய ஆழமான குளங்களில் பிள்ளைகளோடு நீந்தி, மை இல் பளிங்கின் அன்ன தோற்ற பல் கோள் நெல்லி பைங்காய் அருந்தி – அகம் 399/13,14 குற்றமற்ற பளிங்கினைப் போன்ற தோற்றத்தையுடைய பலவாகக் காய்த்த நெல்லியின் பசிய காய்களை உண்டு மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் – பட் 159,160 களங்கம் அற்ற சிறப்பினைடைய தெய்வங்களைக் கொண்ட மலர் அணிந்த (கோயில்)வாசலில் (கட்டின) பலரும் வணங்கும் கொடிகளும் களம்தோறும் கள் அரிப்ப மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 753,754 களங்கள்தோறும் கள்ளை அரிப்பவும், மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டவும் மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5 ஆட்டிறைச்சி கலந்த நெய்யிட்டுச் சமைத்த வெண்சோற்றை வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – அகம் 41/1 பின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட மை சூழ் வெற்பின் மலை பல இறந்து – நற் 214/7 முகில்கள் சூழ்ந்த சிகரங்களையுடைய மலைகள் பலவற்றைக் கடந்து கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும் கராஅம் பேணாய் இரவரின் வாழேன் ஐய மை கூர் பனியே – நற் 292/7-9 கருங்கற்களுக்கிடையே ஓடும் காட்டாற்றில் நீந்தமுடியாத சுழல்களில் திரியும் முதலைகளையும் கருத்தில்கொள்ளாமல் இரவுக்காலத்தில் வந்தால், நான் உயிரோடு இருக்கமாட்டேன் ஐயனே! அதுவும் இந்த இருள் நிறைந்த பனிக்காலத்தில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்