Skip to content
வையை

வையை என்பது வையை ஆறு

1. சொல் பொருள்

‌(பெ) வையை ஆறு,

2. சொல் பொருள் விளக்கம்

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
கண்டதோர் வையை பொருநைநதி (பாரதியார்)

வையை
வையை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

river vaiyai(also called as vaigai)

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356

வைகை போன்று (மக்களின் இடையறாத)போக்குவரத்தை உடைய வாயில்

கனவின் தொட்டது கை பிழை ஆகாது
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை
வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/103-105

கனவில் காதலரின் கையைத் தொட்டது பொய்யாகாமல்
நனவினிலும் கிட்டும்படி, ‘உனக்குரிய செறிந்த நீரையுடைய வையை ஆறு
புதிதாய் வரும் புனலை அணிவதாக’ என்று வரம் கேட்போரும்,

அவிர் அறல் வையை துறை_துறை-தோறும் – மது 340

வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356

வகை சாலும் வையை வரவு – பரி 6/13

வரை சிறை உடைத்ததை வையை வையை – பரி 6/22

வரை சிறை உடைத்ததை வையை வையை/திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் – பரி 6/22,23

வையை
வையை

தமிழ் வையை தண்ணம் புனல் – பரி 6/60

பெருக்கு அன்றோ வையை வரவு – பரி 6/70

சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை/பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை – பரி 6/73,74

இன் இளவேனில் இது அன்றோ வையை நின் – பரி 6/77

வையை வயம் ஆக வை – பரி 6/78

வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும் – பரி 6/82

யாறு உண்டோ இ வையை யாறு – பரி 6/93

இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94

வாடற்க வையை நினக்கு – பரி 6/106

வந்தன்று வையை புனல் – பரி 7/10

தானையான் வையை வனப்பு – பரி 7/50

வையை பெருக்கு வடிவு – பரி 7/60

தாமம் தலை புனை பேஎம் நீர் வையை/நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 7/84,85

வையை
வையை

இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற – பரி 8/51

வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் – பரி 8/61

நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை/வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 8/104,105

போந்தது வையை புனல் – பரி 10/8

யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் – பரி 10/40

நெரிதரூஉம் வையை புனல் – பரி 11/15

சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை/வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/39,40

மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் – பரி 11/43

பாய் தேரான் வையை அகம் – பரி 11/61

நீர் ஒவ்வா வையை நினக்கு – பரி 11/73

வையை நினக்கு மடை வாய்த்தன்று – பரி 11/87

வைகை
வைகை

நீ உரைத்தி வையை நதி – பரி 11/92

நறு நீர் வையை நய_தகு நிறையே – பரி 11/140

வளி வரல் வையை வரவு – பரி 12/8

அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/10

உரைதர வந்தன்று வையை நீர் வையை – பரி 12/32

உரைதர வந்தன்று வையை நீர் வையை/கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் – பரி 12/32,33

வல்லதால் வையை புனல் – பரி 12/75

நன் பல நன் பல நன் பல வையை/நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே – பரி 12/101,102

பூத்தன்று வையை வரவு – பரி 16/19

வாய்த்தன்றால் வையை வரவு – பரி 16/31

தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை/தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று – பரி 20/11,12

கூடல் விழையும் தகைத்து தகை வையை/புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் – பரி 20/26,27

வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42

வையை தொழுவத்து தந்து அடித்து இடித்து – பரி 20/60

ஊடினார் வையை அகத்து – பரி 20/67

தென்னவன் வையை சிறப்பு – பரி 20/97

தீம் புனல் வையை திருமருத முன்துறையால் – பரி 22/45

காமரு வையை கடுகின்றே கூடல் – பரி 24/4

நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி – பரி 24/5

முற்று இன்று வையை துறை – பரி 24/27

அகல் அல்கும் வையை துறை – பரி 24/33

தணிவு இன்று வையை புனல் – பரி 24/50

வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என – பரி 24/62

மழுபொடு நின்ற மலி புனல் வையை/விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி – பரி 24/80,81

தான் தோன்றாது இ வையை ஆறு – பரி 24/87

வழி நீர் விழு நீர அன்று வையை/வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் – பரி 24/90,91

உரு கெழு கூடலவரொடு வையை/வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால் – பரி 24/92,93

தண் வரல் வையை எமக்கு – பரி 25/4

பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/2

வையை உண்டாகும் அளவு – பரி 32/4

வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் – பரி 35/1

வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/20

வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் – கலி 28/7

அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16

வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9

தார் முற்றியது போல தகை பூத்த வையை தன் – கலி 67/3

வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை/கரை அணி காவின் அகத்து – கலி 92/12,13

பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை/வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை – கலி 98/10,11

வையை புது புனல் ஆட தவிர்ந்ததை – கலி 98/31

வரு புனல் வையை வார் மணல் அகன் துறை – அகம் 36/9

மை எழில் உண்கண் மடந்தையொடு வையை/ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து – அகம் 256/10,11

பெரு நீர் வையை அவளொடு ஆடி – அகம் 296/5

வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் – புறம் 71/10

வையை என்ற பொய்யா குலகொடி – மது:13/170

வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – மது:14/72

நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – மது:18/4

கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – மது:20/103

உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு – மது:23/185

வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் – மது:23/212

வையை ஒருவழிக்கொண்டு – வஞ்சி:29/62

வாழியரோ வாழி வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி: 29/124,125

வரு புனல் வையை வான் துறை பெயர்ந்தேன் – வஞ்சி:30/108

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *