Skip to content

சொல் பொருள்

(இ.சொ) ஓர் உவம உருபு, (பெ) உயர்வானது, (வி.அ) மேன்மையுற

சொல் பொருள் விளக்கம்

ஓர் உவம உருபு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a particle of comparison, an object with excellence, to be excellent

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆடு இயல் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரைய
துறை முற்றிய துளங்கு இருக்கை – மது 83-85

அசையும் இயல்பினையுடைய பெரிய மரக்கலங்கள் –
மேகங்கள் சூழ்ந்த மலையைப் போல
துறைகள் சூழ்ந்த – அசைகின்ற இருக்கையினையும்

சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை – நற் 1/4,5

சந்தனமரத்தில் சேர்த்துக்கட்டிய இனிய தேன்கூடு போல
மேன்மையானது சிறந்தவர்களின் நட்பு

அரையுற்று அமைந்த ஆரம் நீவி
புரைய பூண்ட கோதை மார்பினை – அகம் 100/1,2

நறுமணம் கூட்டி அரைக்கப்பெற்று முடிந்த சந்தனத்தைப் பூசி
உயர்வுற மாலையினைப் பூண்ட மார்பினையுடையையாய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *