Skip to content

சொல் பொருள்

(வி) பாதுகா, பேணு, ஆதரி

சொல் பொருள் விளக்கம்

பாதுகா, பேணு, ஆதரி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

keep, preserve, protect, cherish, tend, govern

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மன்பதை புரக்கும் நன் நாட்டு பொருநன் – புறம் 68/10

உலகத்து உயிர்களைப் பாதுகாக்கும் நல்ல சோழநாட்டையுடைய வேந்தன்

பாணர் வருக பாட்டியர் வருக
யாணர் புலவரொடு வயிரியர் வருக என
இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசி – மது 749-752

பாணர் வருவாராக, பாணிச்சியர் வருவாராக,
புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருவாராக’, என்று அழைத்து
(தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம்
கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் வழங்கி,

புலி கொல் பெண்_பால் பூ வரி குருளை
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/1,2

புலியால் கொல்லப்பட்ட பெண் பன்றியின் அழகிய வரிகள் கொண்ட குட்டியை,
வளைந்த வெண்மையான கொம்பினையுடைய ஆண்பன்றி காத்துவளர்க்கும்

ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே – புறம் 40/10,11

ஒரு பெண்யானை படுக்கும் சிறிய இடம்
ஏழு களிற்றியானைகட்கு வேண்டும் உணவினை விளைவிக்கும் நாட்டை உடையோய்.

பூ விரி புது நீர் காவிரி புரக்கும்
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண் – புறம் 166/28,29

பூப் பரந்த புதுநீரையுடைய காவிரி தன் நீரால் உலகத்தைக் காக்கும்
குளிர்ந்த புனல் பக்கத்தையுடைய எம்மூரிடத்தின்கண்

தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் – அகம் 383/1

தன்னை வளர்த்தெடுத்த என்னையும் நினையாளாய்த் துறந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *