Skip to content

சொல் பொருள்

(பெ) 1. மாளிகைக்கு வெளியே அருகிலுள்ள இடம், 2. வேலி அல்லது எல்லைக்கு வெளியே உள்ள இடம், 3. அருகிலுள்ள இடம்

சொல் பொருள் விளக்கம்

1. மாளிகைக்கு வெளியே அருகிலுள்ள இடம்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Premises in the neighbourhood of a palace or castle; Place outside the fence, as of a field, vicinity

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் – பதி 64/7,8

களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய
அரண்மனையின் வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது

புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர்
புய்த்து எறி கரும்பின் விடுகழை – புறம் 28/1112

வேலிப்புறத்து நின்று வேண்டிய மாக்கட்கு, அறத்தைக் கருதி, அகத்துள்ளோர்
பிடுங்கி எறியும் கரும்பாகிய போகப்பட்ட கழை

யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே – புறம் 84/2

யான் மன்னனுக்கு அருகேயுள்ள இடத்தில் இருந்தும் வருந்திப் பொன் போலும் நிறைத்தை உடையவரானோம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *