சொல் பொருள்
(பெ) வீண் பழிச்சொல்,
சொல் பொருள் விளக்கம்
வீண் பழிச்சொல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
gossip, slander
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நகையினும் பொய்யா வாய்மை பகைவர் புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் புரையோள் கணவ பூண் கிளர் மார்ப – பதி 70/12-16 விளையாட்டுக்கும் பொய்கூறாத வாய்மையினையும், பகைவரின் ஒளிவுமறைவான இகழ்ச்சிப்பேச்சையும் கேளாத குற்றம் நீங்கிய அறிவினையும் கொண்ட – நாணம் நிறைந்து, பெருமளவு கபடமின்மை நிலைபெற்று, கற்பு நிலையாகத் தங்கின, மணங்கமழும் ஒளிபொருந்திய நெற்றியையுடைய, சிறந்தவளுக்குக் கணவனே! – பூண்கள் அணிந்த மார்பினையுடையவனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்