Skip to content

சொல் பொருள்

(பெ) 1. காடு, 2. சிறுகாடு, 3. முல்லைநிலம், 4. புறா

சொல் பொருள் விளக்கம்

1. காடு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

forest, jungle, forest tract, dove, pigeon

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி – முல் 24,25

காட்டாறு சூழ்ந்த அகன்ற நெடிய காட்டினில்,
நெடுந்தொலையும் மணக்கும் பிடவ மலரோடு (ஏனைப்)பசிய தூறுகளையும் வெட்டி

காடே கடவுள் மேன புறவே
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/20,21

காடுகள் கடவுள் விரும்பும் இடம் ஆக, முல்லைநிலங்கள்
ஒளிரும் அணிகலன்கள் அணிந்த மகளிரோடு மள்ளர்கள் விரும்பித்தங்கும் இடம் ஆக,

நின் நுதல் நாறும் நறும் தண் புறவில்
நின்னே போல மஞ்ஞை ஆல – ஐங் 413/1,2

உன்னுடைய நெற்றியைப் போலவே மணங்கமழும் நறிய குளிர்ந்த முல்லைவெளியில்
உன்னைப் போலவே மயில்கள் களித்தாட,

மனை உறை புறவின் செம் கால் சேவல் – நெடு 45

வீட்டில் வாழும் புறாவின் சிவந்த காலினையுடைய சேவல்

பூதம் காக்கும் புகல் அருங்கடி நகர்த்
தூதுணம் புறவொடு துச்சில் சேக்கும் - பட்டினப்பாலை (53-58)

பூதங்கள் காக்கும் புகுவதற்கு அரிய காவல் காக்கப்பட்ட ஊரில், சிறிய கற்களை உண்ணும் அழகிய புறாக்களோடு, ஒதுங்கி இருக்கும் இடத்தில் சேரும்.

புலம்புதரு குரல புறவுப்பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அங்குடிச் சீறூர்ச் - குறுந்தொகை 79

ஆண்புறாக்கள் தங்கள் துணையை அழைக்கும் பாலைநிலத்தில் உள்ள, அழகிய குடிகளையுடைய சிற்றூரில் தங்கினரோ?

துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும்
அத்தம் அரிய என்னார் நம் துறந்து - குறுந்தொகை 174

நெருங்கிய மெல்லிய சிறகுகளையுடைய, ஆணும் பெண்ணுமாக இணைந்திருக்கும் புறாக்களைப் பிரிந்து ஓடச் செய்யும். 

புறவுப் புறத்தன்ன புன்கா லுகாஅய்க்
காசினை யன்ன நளிகனி யுதிர - குறுந்தொகை 274

புறாவின் முதுகைப் போன்ற மென்மையான  அடிப்பக்கத்தை உடைய உகாய் மரத்தின், மணியைப் போன்ற, செறிந்த பழங்கள் உதிரும்படி

புன்புறப் பெடையொடு பயிரி யின்புற
இமைக்கண் ஏதா கின்றோ ஞெமைத்தலை - குறுந்தொகை 285

இனிய ஆண் புறா, மெல்லிய சிறகுகளையுடைய பெண் புறாவொடு கூடுவதற்காகப் பலமுறை அழைத்து, இமைப்பொழுதில் எத்தகைய இன்பத்தை அடைகிறது!

வகை அமர் நல் இல் அக இறை உறையும்
வண்ணப் புறவின் செங் காற் சேவல் - நற்றிணை 71

இறைவான மாடத்தில் வண்ணப் புறா.
அதன் செங்கால் சேவல்.
அது விரும்பும் பெண்புறா.

மனை உறை புறவின் செங் காற் பேடைக்
காமர் துணையடு சேவல் சேர - நற்றிணை 162

வீட்டில் வாழும் புறா, சிவந்த கால்களை கால்களை உடைய பெண்புறா தான் விரும்பும் சேவல்-புறாவின் அடுத்துத் துணையாகச் சேர்ந்து நிற்கும். 

கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய
கானப் புறவின் சேவல் வாய் நூல் - நற்றிணை 189

புறாவைப் பிடிக்க வேட்டுவன் வலை விரிப்பான். அந்த வலையில் பட்ட காட்டுப் புறாவின் ஆண் வலையைப் பிய்த்துக்கொண்டு பறந்தோடும். அங்கே மரத்தில் சிலந்திப் பூச்சி கட்டியிருக்கும் கூட்டைப் பார்த்து இதுவும் வலையோ என்று எண்ணி அஞ்சி நடுங்கும். 

வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி -  நற்றிணை 305

வரிப்புறா புலம்பும் ஒலி கேட்கும்போது, 
வெயில் தணிந்த மாலை வேளையில், 


பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி -  நற்றிணை 384

மென்மையான (பை, பசுமை, இளமை) 
முதுகையும், 
சிவந்த கால்களையும் உடைய 
புறாச் சேவல் 
களர் நிலத்து முடக்கள்ளிக் கவட்டையில் (கவை) 

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *