Skip to content

சொல் பொருள்

(வி) 1. (ஈரம்) உலர், 2. விடி, 3. காய்ந்துபோ, 4. குறை, 5. சூடு அல்லது வெம்மை குறை, 6. புலால் நாற்றம் வீசு,

சொல் பொருள் விளக்கம்

1. (ஈரம்) உலர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

become dry, dawn, become parched, dwindle, decrease (in heat), stink with the smell of raw meat,

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் – சிறு 98

வில்லை எடுத்த சந்தனம் பூசி உலர்ந்துபோன திண்ணிய தோளினையும்

வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – அகம் 41/1

பின்னிருட்டு புலர்ந்த விடியல் வேளையில் எருமைகளை மேய்நிலத்திற்கு ஓட்டிவிட,

அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும் – அகம் 1/12,13

நீர் அற்ற பசுமையான சுனைகள் ஈரப்பசையே இன்றிக் காய்ந்துபோனதால்
நெல்விழுந்தால் பொரிந்துபோகும் அளவு வெம்மையுடைய

யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என்
பிரிதல் சூழான்-மன்னே இனியே
கானல் ஆயம் அறியினும் ஆனாது
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால்
புலர்வது-கொல் அவன் நட்பு எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே – நற் 72/6-11

“நான் எமது தாய்க்கு அஞ்சுகிறேன்” என்று சொன்னாலும், தான் என்னைவிட்டுப்
பிரிந்துசெல்லுதலை எண்ணமாட்டான்; இப்பொழுதோ,
கானலில் உள்ள விளையாட்டுத் தோழியருக்குத் தெரிந்தாலும், அதனைப் பொறுக்காமல்
பழிச்சொல் வந்துவிடுமோ என்று கூறுகின்றான்; அதனால்
குறைவுபட்டதோ அவன் காதல் என்று
அஞ்சுகிறேன் தோழி என் மனத்துக்குள்

அவையா அரிசி அம் களி துழவை
மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி – பெரும் 275,276

அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை 275
அகன்ற வாயையுடைய தட்டுப் பிழாவில் சூடு குறைய ஆற்றி,

இரும்பு வடித்து அன்ன கரும் கை கானவன்
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி
இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன்
புல் வேய் குரம்பை புலர ஊன்றி – அகம் 172/6-10

இரும்பினை வார்த்துச் செய்தாற் போன்ற வலிய கையினையுடைய வேட்டுவன்
விரிந்த மலரினையுடைய வெண்கடம்பினைச் சார்ந்து நின்று அம்பினை ஆய்ந்துகொண்டு
வரி பொருந்திய நெற்றியினையுடைய களிற்றின் அரிய மார்பில் செலுத்தி
பகையினைக் கொல்லும்வலியினையுடைய அதன் வெள்ளிய கொம்பினைக் கொண்டுவந்து தனது
ஊகம் புல்லால் வேய்ந்த குடிசையில் புலால் நாற்றம்வீச ஊன்றுதல்செய்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *