சொல் பொருள்
(வி) வெறு, (பெ) புலால் நாற்றம்,
சொல் பொருள் விளக்கம்
வெறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dislike, abhor, smell of meat or fish
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உள்ளாற்று கவலை புள்ளி நீழல் முழூஉ வள்ளூரன் உணக்கும் மள்ள புலவுதி மாதோ நீயே – புறம் 219/1-3 ஆற்றின் நடுவே உள்ள இடைவெளியில், புள்ளிப்பட்ட மரநிழலில் இருந்து உடம்பாகிய முழுத்தசையை (உண்ணாநோன்பிருந்து) வாட்டும் வீரனே (நான் தாமதமாக வந்ததினால்) என்னை வெறுத்தாயோ நீயே? புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181 புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின் வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119 கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்