Skip to content

சொல் பொருள்

(வி) வெறு, (பெ) புலால் நாற்றம்,

சொல் பொருள் விளக்கம்

வெறு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

dislike, abhor, smell of meat or fish

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உள்ளாற்று கவலை புள்ளி நீழல்
முழூஉ வள்ளூரன் உணக்கும் மள்ள
புலவுதி மாதோ நீயே – புறம் 219/1-3

ஆற்றின் நடுவே உள்ள இடைவெளியில், புள்ளிப்பட்ட மரநிழலில் இருந்து
உடம்பாகிய முழுத்தசையை (உண்ணாநோன்பிருந்து) வாட்டும் வீரனே
(நான் தாமதமாக வந்ததினால்) என்னை வெறுத்தாயோ நீயே?

புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல் – சிறு 181

புலால் நாறும் கயலை(முழுகி) எடுத்த பொன்(னிறம் போலும்) வாயையுடைய (நீல)மணி(போன்ற) மீன்கொத்தியின்

வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119

கூரிய முனை மழுங்கின புலால் நாறும் வாயையுடைய வேல்களை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *