Skip to content

சொல் பொருள்

(பெ) சங்ககாலச் சமுதாயத்தில் கீழ்நிலையில் இருப்பதாகக்கருதப்பட்ட ஒரு வகுப்பைச் சேர்ந்தவன்,

சொல் பொருள் விளக்கம்

சங்ககாலச் சமுதாயத்தில் கீழ்நிலையில் இருப்பதாகக்கருதப்பட்ட ஒரு வகுப்பைச் சேர்ந்தவன்,

பாணர்கள், ஈமச்சடங்குகள் செய்வோர், சலவைத்தொழிலாளிகள் ஆகியோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a person belonging to a community considered to be low in sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

துடி எறியும் புலைய
 எறி கோல் கொள்ளும் இழிசின – புறம் 287/1,2

துடிப்பறை கொட்டும் புலையனே
பறையை முழக்கும் குறுந்தடியைக் கைக்கொண்டு நிற்கும் இழிநிலையில் உள்ளவனே!

வலைவர் போல சோர் பதன் ஒற்றி
புலையர் போல புன்கண் நோக்கி
தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான் – கலி 55/17-19

வலையை விரித்துக் காத்திருக்கும் வேட்டுவர் போல, அவன் சொல்வலையில் நான் சொக்கிப்போவேன் என்று எதிர்பார்த்து,
கொடுமைக்காரர் போல நான் வருத்தமடையும்படி பார்த்து,
என்னைக் கையெடுத்துக் கும்பிட்டான், கையால் தொட்டுப்பார்க்கவும் செய்தான்,

புதுவன ஈகை வளம் பாடி காலின்
பிரியா கவி கை புலையன் தன் யாழின்
இகுத்த செவி சாய்த்து – கலி 95/9-11

புதிது புதிதாய்க் கொடுக்கும் ஈகை வளத்தைப் பாடியவனாக, உன் காலைவிட்டுப்
பிரியாத கவிந்த கையனாக இருக்கும் உன் பாணன் தன் யாழில்
இசைக்க, அதற்குச் செவிசாய்த்து

கள்ளி போகிய களரி மருங்கில்
வெள்ளில் நிறுத்த பின்றை கள்ளொடு
புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி
புலையன் ஏவ புல் மேல் அமர்ந்து உண்டு
அழல்வாய் புக்க பின்னும் – புறம் 360/16-20

கள்ளிகள் ஓங்கியுள்ள பிணம்சுடு களத்தின்கண்
பாடையை நிறுத்திய பின் கள்ளுடனே
பரப்பிய தருப்பைப்புல்லின் மேல் படைக்கப்பட்ட சில சோறாகிய உணவை
புலையன் உண்ணுமாறு படைக்க தருப்பைப்புல் மேல் இருந்து உண்டு
தீயில் வெந்து சாம்பலானது கண்ட பின்னும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *