Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பசு, ஆடு, போன்ற விலங்குகளின் உணவான சிறிய பச்சைத் தாவரம், 2. புல்லரிசி, பஞ்சகாலத்தில் ஏழைகள் உண்ணும் அரிசி போன்ற தானியம், 3. புறத்தே அமைந்தது, 4. சிறியது, 5. இழிவு, 6. அற்பம்

சொல் பொருள் விளக்கம்

1. பசு, ஆடு, போன்ற விலங்குகளின் உணவான சிறிய பச்சைத் தாவரம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

grass, Grain of cluster grass, Cynosurus egyptius, eaten in time of scarcity, that which is external, that which is small, meanness, smallness in value

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பணை நிலை முனைஇய பல் உளை புரவி
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 93,94

கொட்டிலில் நிற்பதை வெறுத்த நிறைந்த பிடரிமயிரையுடைய குதிரைகள்
புல்லாகிய உணவை வாய் நிறைய மெல்லும்(போது ஏற்படும்) தனிமை (அமைதியைக்)கெடுக்கும் ஓசையோடு

இரு நில கரம்பை படு நீறு ஆடி
நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 93,94

கரிய நிலமாகிய கரம்பை நிலத்தில் உண்டாகின்ற புழுதியை அளைந்து,
மெல்லிய புல்லரிசியை வாரியெடுத்துக்கொண்ட வெண்மையான பல்லையுடைய எயிற்றியர்

முள் அரை தாமரை புல் இதழ் புரையும்
நெடும் செவி குறு முயல் – பெரும் 114,115

முள்(இருக்கும்)தண்டு (உடைய) தாமரையின் புறவிதழை ஒக்கும்
நீண்ட காதுகளைக்கொண்ட சிறிய முயல்களை

புலி போத்து அன்ன புல் அணல் காளை – பெரும் 138

புலியின் போத்தை ஒத்த, குறுந்தாடியினையுடைய (அந்நிலத்துத்)தலைவன்

புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் – மலை 449

அழகில்லாத அடிப்பகுதியையுடைய காஞ்சி மரங்களும், நீர் மோதுகின்ற மதகுகளும்,

வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 392/9

வெள்ளிய வாயையுடைய கழுதையாகிய அற்பவிலங்குகளின் நிரையைப் பூட்டி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *