சொல் பொருள்
பறவையின் கால்பதிவு
பதியச் செய்யும் முத்திரை
பொறிக்கப்பட்ட அடையாளம்
அரைப் புள்ளி அடையாளம் அன்னது(;)
சொல் பொருள் விளக்கம்
புள் அடி என்பது பறவையின் கால்பதிவு. அப் பதிவு போல் பதியச் செய்யும் முத்திரையைப் புள்ளடி என்பது யாழ்ப்பாண நாட்டு வழக்கு. புள்ளடி என்பது தமிழ்க் கல்வெட்டுகளில் ஆளப்படும் சொல். எல்லைக்கல் அது. அதில் பொறிக்கப்பட்ட அடையாளம் பற்றிப் புள்ளடி எனப்பட்டது. ‘காக பாதம்’ என்பதும் அது. அரைப் புள்ளி அடையாளம் அன்னது(;).
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்