Skip to content

சொல் பொருள்

(பெ) 1. ஆரவாரம், அமளி, 2. தகராறு, சிறுசண்டை, 3. வருத்தம், துயரம்

சொல் பொருள் விளக்கம்

1. ஆரவாரம், அமளி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

clamour, loud uproar, quarrel, dispute, sorrow, distress

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291

தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும்,

குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன்
தேம் கமழ் ஐம்பால் பற்றி என் வயின்
வான் கோல் எல் வளை வௌவிய பூசல்
சினவிய முகத்து சினவாது சென்று நின்
மனையோட்கு உரைப்பல் என்றலின் – நற் 100/3-7

ஆழமான நீரில் முளைத்த ஆம்பல் பூவையுடைய குளிர்ந்த துறையையுடைய ஊரன்
இனிதாய்க் கமழும் என் கூந்தலைப் பற்றி இழுத்து, என் கையிலுள்ள
நீண்டு திரண்டு ஒளிபொருந்திய வளையல்களைக் கவர்ந்த தகராறினால்
வெளியில் கோபங்கொண்ட முகத்தோடு, உள்ளத்தில் கோபமில்லாது, சென்று உனது
மனைவிக்கு உரைப்பேன் என்று சொன்னதினால்,

கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே – கலி 34/24

கண்ணுக்குற்ற வருத்தத்தைக் கைகள் விரைந்து சென்று துடைப்பது போல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “பூசல்”

  1. Sundar Balasubramanian

    மனையோட்கு – not necessarily wife. It seems like this word refers to the people at his home. There is an indication of plurality here.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *