சொல் பொருள்
(வி) 1. நீரால் அலம்பு, 2. ஒரு பரப்பின் மேல் தடவு,
சொல் பொருள் விளக்கம்
1. நீரால் அலம்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wash with water
besmear, anoint, rub, daub, spread on, plaster;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: புலாஅல் கையர் பூசா வாயர் – அகம் 265/18 புலால் நீங்காத கையினராய், கழுவாத வாயினராய் பொதிர்த்த முலை இடை பூசி சந்தனம் உதிர்த்து பின் உற ஊட்டுவாள் விருப்பும் – பரி 21/25,26 பருத்தெழுந்த தன் முலையின்மேல் சந்தனத்தைப் பூசி, பின் காய்ந்துபோன அச் சந்தனத்தை உதிர்த்துவிட்டு மேலும் நிறைய சந்தனத்தைப் பூசுபவளின் காம விருப்பமும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்