Skip to content

சொல் பொருள்

(பெ) பறவைகளின் பெண்பால்,

சொல் பொருள் விளக்கம்

பறவைகளின் பெண்பால்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

female of birds

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கலித்தொகையில் மட்டும் எருமையின் பெண் பெடை எனப்படுகிறது.

கோழி வய பெடை இரிய – திரு 311

பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி – பொரு 47

பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ – நற் 152/7

புன் புறா வீழ் பெடை பயிரும் – நற் 314/11

பழன கம்புள் பயிர் பெடை அகவும் – ஐங் 60/1

குயில் பெடை இன் குரல் அகவ – ஐங் 341/2

புன் புற எருவை பெடை புணர் சேவல் – பதி 36/9

பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 117/7

மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன்
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என
கதுமென காணாது கலங்கி அ மட பெடை
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி – கலி 70/1-4

சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை
பாய் இரும் பனி கழி துழைஇ பைம் கால்
தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் – நற் 31/2-4

கரும் தாள் மிடற்ற செம்பூழ் சேவல்
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் – அகம் 63/78

பாடு இமிழ் பனி கடல் துழைஇ பெடையோடு
உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை – நற் 91/3,4

உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல்
விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக
இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள்_இனம் இறைகொள – கலி 132/1-3

வலிமை மிக்க நீரலைகள் வந்து மோதுவதால் உயர்ந்து எழுந்து உண்டான மணல் மேட்டில்,
பல்வேறு உருவங்களுடன், தாம் விரும்பும் பெடைகள் துணையாக,
இரை தேர்ந்து உண்டு இளைப்பாறியிருக்கும் பறவைக் கூட்டம் தங்கியிருக்க,

தரு மணல் தாழ பெய்து இல் பூவல் ஊட்டி
எருமை பெடையோடு எமர் ஈங்கு அயரும் – கலி 114/12,13

புதிதாய்த் தருவிக்கப்பட்ட மணலைக் கீழே பரப்பி, வீட்டுக்குச் செம்மண் பூசி,
பெண் எருமைமாட்டுக் கொம்பை நட்டு எமது சுற்றத்தார் இங்குக் கொண்டாடும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *