சொல் பொருள்
(பெ) 1. பெயரையுடையவன், 2. தந்தையின் பெயரைத் தாங்குபவன், பேரன்,
சொல் பொருள் விளக்கம்
1. பெயரையுடையவன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
One who bears a name
one who takes one’s father’s name, grandson
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/35 சிறப்புடைய எம் தந்தையின் பெயர்கொண்டவனை நான் எடுத்துச் செல்கிறேன், நள்ளென் கங்குல் கள்வன் போல அகன் துறை ஊரனும் வந்தனன் சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/10-12 நள்ளென்ற இரவில் கள்வன் போல, அகன்ற துறையையுடைய தலைவனும் வந்தான், சிறந்தோனாகிய தன் தந்தையின் பெயரைத் தாங்குபவன் பிறந்ததினால்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்