Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பெயரையுடையவன், 2. தந்தையின் பெயரைத் தாங்குபவன், பேரன், 

சொல் பொருள் விளக்கம்

1. பெயரையுடையவன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

One who bears a name

one who takes one’s father’s name, grandson

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 81/35

சிறப்புடைய எம் தந்தையின் பெயர்கொண்டவனை நான் எடுத்துச் செல்கிறேன்,

நள்ளென் கங்குல் கள்வன் போல
அகன் துறை ஊரனும் வந்தனன்
சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே – நற் 40/10-12

நள்ளென்ற இரவில் கள்வன் போல,
அகன்ற துறையையுடைய தலைவனும் வந்தான்,
சிறந்தோனாகிய தன் தந்தையின் பெயரைத் தாங்குபவன் பிறந்ததினால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *