சொல் பொருள்
(பெ) பறவையின் பெண் பால்,
பார்க்க : பெடை
சொல் பொருள் விளக்கம்
பறவையின் பெண் பால்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Female of birds; hen;
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: காமரு தகைய கான வாரணம் பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர் மணல் மலிர கெண்டி நாள்_இரை கவர மாட்டி தன் பேடை நோக்கிய பெரும் தகு நிலையே – நற் 21/8-12 காண்போர் விரும்பும் தன்மையவான காட்டுக்கோழியின் சேவல் மழை நீர் ஓடிய அகன்ற நெடிய முல்லைக்காட்டில் புலராத ஈர மணலை நன்றாகக் கிளறி அன்றைய நாளுக்குரிய இரையை அலகினால் பற்றிக் கொன்று தன் பெடையை நோக்குகின்ற பெருமை வாய்ந்த நிலையினை மனை உறை புறவின் செம் கால் பேடை – நற் 162/1,2 தோடு அமை தூவி தடம் தாள் நாரை நலன் உணப்பட்ட நல்கூர் பேடை – நற் 178/2,3 உள் இறை குரீஇ கார் அணல் சேவல் பிற புல துணையோடு உறை புலத்து அல்கி வந்ததன் செவ்வி நோக்கி பேடை நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் – நற் 181/1-5 கொடு வாய் பேடை குடம்பை சேரிய உயிர் செல கடைஇ புணர் துணை பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – நற் 338/10-12 கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை – நற் 367/1,2 மனை உறை கோழி குறும் கால் பேடை – குறு 139/1,2 வங்கா கடந்த செம் கால் பேடை – குறு 151/1 நீர் உறை கோழி நீல சேவல் கூர் உகிர் பேடை வயாஅம் ஊர – ஐங் 51/1,2 புன் தலை பேடை வரி நிழல் அகவும் – ஐங் 62/2 வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை – ஐங் 85/1 உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1 மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் – கலி 147/65 கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை – அகம் 3/4,5 வீளை பருந்தின் கோள் வல் சேவல் வளை வாய் பேடை வருதிறம் பயிரும் – அகம் 33/5,6 சிறு பைம் தூவி செம் கால் பேடை நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி – அகம் 57/1,2 சிறிய மெல்லிய சிறகுகளையும் சிவந்த கால்களையும் உடைய வௌவால் பேடை நீண்ட தன்மையையுடைய வானத்தில் தாவித்தாவிப் பறந்து கடந்து, பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் – அகம் 129/8,9 பருத்த வயிற்றினையுடைய இளங்காயைப் பேடைகட்கு ஊட்டி ஆண்பறவைகள் பிளந்து போகட்ட பஞ்சினையுடைய வெள்ளிய கொட்டையை கடவுள் மரத்த முள் மிடை குடம்பை சேவலொடு புணரா சிறு கரும் பேடை இன்னாது உயங்கும் கங்குலும் – அகம் 270/12-14 தெய்வத்தினையுடைய மரத்திடத்தவாகிய முள்ளால் மிடையப்பெற்ற கூட்டில் தன் சேவலுடன் கூடப்பெறாத அன்றில்பேடை துன்பமுற்று வருந்தும் இரவிலும் குடுமி கொக்கின் பைம் கால் பேடை – அகம் 290/1 வரி புற இதலின் மணி கண் பேடை – அகம் 387/10
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்