சொல் பொருள்
(வி.அ) மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக,
சொல் பொருள் விளக்கம்
மெல்ல மெல்ல, சிறிது சிறிதாக,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
slowly,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எரி அகைந்து அன்ன தாமரை பழனத்து பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பய பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் – அகம் 106/1-4 தீ கிளைத்து எரிந்தாற் போலும் தாமரைப் பூக்கலையுடைய வயலில் நெற்பொரி முதலியன தெரித்தாற் போன்று விளங்கும் பல சிறிய மீன்களை உண்ணும்பொருட்டு, மணங்கொண்ட பசிய இலையில் மெல்ல மெல்ல பறத்தலொழிந்த முதிய சிச்சிலிப்பறவை அசைந்து வந்து இருக்கும் எள் அற இயற்றிய நிழல்காண் மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் – அகம் 71/13-15 இகழ்ச்சியற இயற்றப்பெற்ற உருவம்காணும் கண்ணாடியின் அகத்தே ஊதிய ஆவி முதலில் பரந்து பின் சுருங்கினாற்போன்று சிறிது சிறிதாகக் குறைந்து என் வலிமை மாய்தல் வேண்டும்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்