Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. தூளாகு,  2. தீய்ந்துபோ, 3. வெறு

2. (பெ) 1. நுண்ணியது, சிறியது, 2. நீறு, சாம்பல்,

சொல் பொருள் விளக்கம்

தூளாகு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be broken to pieces, become pulverised;, be blighted, as gram, despise, dislike, anything that is small or minute, ash

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கல் கண் பொடிய கானம் வெம்ப
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க
கோடை நீடிய பைதறுகாலை – புறம் 174/24-26

மலையிடம் புழுதிக்காடாக, காடு தீ மிக
மிக்க நீர் எல்லையையுடைய நீர்நிலைகள் பலவும் காய்ந்துபோக
இவ்வாறு கோடை நீடப்பட்ட பசுமையற்ற காலத்து

கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு
எம் கண் எமரோ பொறுப்பர் பொறாதார்
தம் கண் பொடிவது எவன் – கலி 105/58-60

அந்த எருமைக் கூட்டத்து ஆயர் மகனோடு நாம் காதல்கொண்டதனுக்கு
எம்மிடம் எம் சுற்றத்தார் பொறுத்துக்கொண்டனர்; அது பொறுக்காத இவ்வூரார்
கண்கள் தீய்ந்துபோவது ஏன்?

புல் உளை குடுமி புதல்வன் பன்மாண்
பால் இல் வறும் முலை சுவைத்தனன் பெறாஅன்
கூழும் சோறும் கடைஇ ஊழின்
உள் இல் வரும் கலம் திறந்து அழ கண்டு
மற புலி உரைத்தும் மதியம் காட்டியும்
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி
பொடிந்த நின் செவ்வி காட்டு என பலவும்
வினவல் ஆனாள் ஆகி நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப – புறம் 160/18-26

புல்லிய உளைமயிர் போலும் குடுமியை உடைய புதல்வன் பலமுறை
பால் இல்லாத வறுவிய முலையைச் சுவைத்துப் பால் பெறானாய்
கூழையும் சோற்றையும் வேண்டி விரைந்து முறைமுறையே
உள்ளே ஒன்றுமில்லாத வறிய அடுகலத்தைத் திறந்து அங்கு ஒன்றும் காணாது அழ, அதனைப் பார்த்து
மறத்தை உடைய புலியை வரவு சொல்லி அச்சமுறுத்தியும், அம்புலியைக் காட்டியும்
அவற்றால் தணிக்க இயலாமையின் வருந்தினளாய், நின் பிதாவை நினைத்து
வெறுத்த நின் செவ்வியைக் காட்டு எனச் சொல்லி மிகுதிப்பட
கேட்டல் அமையாளாய் நனவின்கண்ணும்
துயரமுறுவோள் வளப்பம் மிக

கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
வண்டல் பாவை வௌவலின்
நுண் பொடி அளைஇ கடல் தூர்ப்போளே – ஐங் 124

கண்கூடாகப் பார்த்தேன் அல்லவா, தலைவனே! உன் காதற்பரத்தையை,
மணற்பாவையைக் கடலலை கவர்ந்துசெல்ல
நுண்ணிய குறுமணலை வாரியெடுத்துக் கடலை நோக்கி வீசிக் கடலைத் தூர்க்க முயல்கின்றவளை 

கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெற
பொடி அழல் புறந்தந்த பூவா பூ பொலன் கோதை – கலி 54/1,2

கொடியிலும் கொம்புகளிலும் நீரினால் நிறம் பெறும் பூக்களைப் போலன்றி, நீரின்றி அழகு பெற்ற
நீறு பூத்த நெருப்பினால் செய்யப்பட்ட பூவாத பூவாகிய பொன் மலர் மாலையையும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *