Skip to content

சொல் பொருள்

(பெ) 1. இயல்பானது, 2. சிறப்பின்மை, 3. திருமணம் போன்ற பொதுவான நிகழ்ச்சிகள், 4. எல்லாருக்கும் உரியது,

சொல் பொருள் விளக்கம்

இயல்பானது,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

that which is natural or usual, lack of distinction, the usual events like marriage etc., that which is common

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல
பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம்
செய்கின்றே செம் பூ புனல் – பரி 7/20-22

விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவன் செய்த மேனிப் பூச்சுக்குரிய கலவையைப் போல,
இயல்பான மணத்தை உள்ளுக்குள் மறைத்துக்கொண்டு, புதிய ஒரு மணத்தைச்
செய்து வந்தது சிவந்த அழகிய புதுப்புனல்;

அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ
மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ
பொது கொண்ட கவ்வையின் பூ அணி பொலிந்த நின்
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை – கலி 66/9-12

தலையணை போன்ற மென்மையான தோள்களைக் கொண்ட நாம் வருந்தியிருக்க, நீ விரும்பும்
துணையைக் கூடி, நீ
மணக்கோலம் பூண்ட அந்த மனையில் இருக்கின்றாய் என்று உனக்குக் கிடைத்த பெரும்பேச்சைக் காட்டிலும்
சிறந்ததன்றோ,
சிறப்பில்லாத இரைச்சலுக்கிடையே, பூமாலையை அணிந்துகொண்டு பொலிவுற்றிருந்த உன்
பரத்தையருடனான திருமணத்தினால் கமழ்கின்ற மணத்தோடு இங்கு வர, அதை விடியற்காலத்தில்
நான் பெற்றது

உச்சி குடத்தர் புத்து அகல் மண்டையர்
பொது செய் கம்பலை முது செம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை_முறை தர_தர – அகம் 86/9-11

தலையுச்சியில் குடத்தினையுடையவரும், கையினில் புதிய அகன்ற மண்டை என்ற கலத்தினையுடையவரும்
மணத்தினைச் செய்து வைக்கும் ஆரவாரமுடைய முதிய மங்கல மகளிர்
முன்னே தருவனவும் பின்னே தருவனவும் முறைமுறையாகத் தந்திட
– வேங்கடசாமி நாட்டார் உரை
பொதுப்பணி செய்வதில் ஆர்வமும் ஆரவாரமும் உடைய முதுமையுடைய மங்கல நாண் உடைய
பேரிளம் பெண்டிர்
– பொ. வே. சோமசுந்தரனார் உரை

சின போர் வழுதி
தண் தமிழ் பொது என பொறாஅன் போர் எதிர்ந்து- புறம் 51/4,5

சினம் பொருந்திய போரையுடைய வழுதி
குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது என்று கூறப்பெறானாய் போரை ஏற்று

பார்க்க : பொதுச்சொல், பொதுநோக்கு, பொதுமகளிர், பொதுமீக்கூற்றம், பொதுமொழி, பொதுவாக, பொதுவினை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *