Skip to content

சொல் பொருள்

(பெ) 1. போரிடுவோன், போர்வீரன், 2. அரசன், 3. கூத்தன், 

சொல் பொருள் விளக்கம்

போரிடுவோன், போர்வீரன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

warrior, hero, king, actor, dancer-singer

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி
போர் மிகு பொருந குருசில் என பல
யான் அறி அளவையின் ஏத்தி – திரு 275-277

சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின வலிமையுடைமையால் மதவலி என்னும் பெயரையுடைத்தோய்,
போர்த்தொழிலில் மிகுகின்ற வீரனே, தலைவனே’, என்று பலவற்றையும்
நான் அறிந்த அளவாலே புகழ்ந்து

அறம் துஞ்சு உறந்தை பொருநனை இவனே – புறம் 58/9

அறம் தங்கும் உறையூரின்கண் அரசன் இவனே

அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர்
சாறு கழி வழி நாள் சோறு நசையுறாது
வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந – பொரு 1-3

இடையறாத (செல்வ)வருவாயினையுடைய அகன்ற இடத்தையுடைய பெரிய ஊர்களிடத்து,
விழாக்கழிந்த அடுத்தநாளில், (அங்குப்பெறுகின்ற)சோற்றை விரும்புதல் செய்யாது,
வேற்றுப்புலத்தை எய்த நினைத்த விவேகத்தை அறிந்த கூத்தனே,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *