சொல் பொருள்
1. (வி.மு) மோதுகின்றது, 2. (பெ.எ) மோதுகின்ற, போரிடும், போரிடுகின்ற,
சொல் பொருள் விளக்கம்
மோதுகின்றது,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
dashes against, dashing, warring
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/9,10 இவ்வாறு வந்து மதுரை நகரின் மதிலை மோதுகின்றது, தூய மலர்களைப் பரப்பிக்கொண்டு அழகிய குளிர்ந்த நீரையுடைய வையையாறு என்று சொல்லக் கேட்டு, தார் முற்றியது போல தகை பூத்த வையை தன் நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார் போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் – கலி 67/3-5 மாலை சூடியது போல அழகைப் பூத்துக்கொண்டு வரும் வையை, தன் நீரினால் சூழ்ந்துகொண்டு மதிலுடன் மோதுகின்ற பகையே அன்றி, பகைவர் போருக்காக வளைத்துக்கொள்வது என்ற ஒன்றை அறியாத மதில்கள் சூழ்ந்த நீரையுடைய ஊரினன், நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை – மலை 335 காளைகள் சண்டையிடும் கல்லென்ற ஆரவாரமும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்